A.K.M. Ramzy / 2021 மார்ச் 03 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி :
உயிருக்கு ஆபத்து உள்ளதால், மஹாராஷ்டிரா வில் உள்ள வழக்குகளை, ஹிமாச்சல பிரதேசத்தின், சிம்லாவுக்கு மாற்றும்படி, பிரபல பொலிவுட் நடிகை கங்கனா ரணாவத், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு, மும்பை உயர் நீதிமன்றத்தில், நடிகை கங்கனா, அவரது சகோதரி ரங்கோலி சந்தேல் ஆகியோர் மீது, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், இவர்கள் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ள தாவது:
எங்கள் மீது, பல அவதுாறு வழக்குகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. சட்டத்தை மதித்து, இந்த வழக்குகளில் ஆஜராக தயாராக உள்ளோம். ஆனால், மஹாராஷ்டிராவில் ஆட்சியில் உள்ள சிவசேனா, தொடர்ந்து எங்களை அச்சுறுத்தி வருகிறது.
முன் அனுமதியில்லாமல் கட்டியதாக, என் வீட்டின் ஒரு பகுதியை இடித்தனர். ஆனால், அது சட்டவிரோதம் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.மஹாராஷ்டிரா அரசும், சிவசேனாவும், தொடர்ந்து எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றன. அதனால், வழக்குகள் விசாரணைக்காக மும்பை செல்வது, உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
அதனால், மஹாராஷ்டிராவில் எங்கள் மீதுள்ள வழக்குகளை, சிம்லாவுக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago