2026 மார்ச் 09, திங்கட்கிழமை

உயிர்த் தியாகிகளுக்கு நினைவுக் கல்வெட்டு

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,

காவல்துறைப்பணியின் போது உயிர் தியாகம் செய்த காவலர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் நாளை காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

சென்னையில் காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு அமைந்துள்ள காவலர் 

நினைவிடத்தில், நாளை காலை 8 மணிக்கு காவலர்கள் அணிவகுப்பு நடைபெறுகிறது. இதற்காக கடந்த 17ஆம் திகதி  முதல் 4 நாள்களாக ஒத்திகை நடைபெற்று வந்தது.

இதனை முன்னிட்டு இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி

பழனிசாமி ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து உயிர்தியாகம் செய்த 151 பேரின் உருவம் பொறித்த நினைவு கல்வெட்டினை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில் மரக்கன்றுகள் நட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .