A.K.M. Ramzy / 2021 ஜனவரி 03 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான 'Morning Consult'
உலக தலைவர்களின் தலைமை செயல்பாடுகள் குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியது.
அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, கனடா, ஆவுஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ ஆகிய 13 நாடுகளின் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இந்தியாவில் நடத்தப்பட்டகருத்துக் கணிப்பில் 75 சதவீதம் மக்கள் பிரதமர் மோடியின் தலைமையை அங்கிகரித்துள்ளனர். 20 சதவீதம் பேர் எதிர்த்துள்ளனர்.
எதிர்ப்பாளர்களின் வாக்குகள் கழிக்கப்பட்டு மீதமிருக்கும் வாக்குகள் உலக தலைவர்களின் கணக்கில் சேர்க்கப்படுகிறது. அதன்படி மோடிக்கு 55 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி பதவியேற்றது முதல் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. அவரது ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். கடினமான நேரங்களில் அவர் நாட்டை சிறப்பாக வழிநடத்துகிறார் என்று தெரிவித்துள்ளார்
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026