2026 மார்ச் 07, சனிக்கிழமை

உலகத்துக்கு தலைமை வகிக்க வேண்டும்

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடில்லி:

இந்தியா நூறாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, உலகத்துக்கு தலைமை வகிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து ள்ளார்.

நாஸ்காம் தொழில்நுட்பம் மற்றும் தலைமை அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி வீடியோ கொண்பரன்ஸ் வாயிலாக பேசியதாவது:

ஜனநாயகத்துக்கு சிறந்த நிர்வாகம் தேவை. மத்திய அரசை இந்திய மக்கள் நம்புகின்றனர். அரசின் சேவையை மக்களுக்கு கிடைக்க செய்துள்ளோம். முந்தைய காலத்தில் அரசின் கொள்முதல் குறித்து பல கேள்விகள் இருந்தன. தற்போது தொழில்நுட்பம் காரணமாக அனைத்திலும் வெளிப்படைத்தன்மை நிலவுகிறது. அரசின் டெண்டர்கள் ஒன்லைன் மூலம் விடப்படுகிறது.

உலக நாடுகளுக்கு, மைய மேடையாக இந்திய தொழில்நுட்பம் மாறியுள்ளது. இந்திய தொழில்நுட்ப தலைமைப்பண்பு இன்னும் பல மடங்கு வளர வேண்டியுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளும், புது திட்டங்களும் இந்தியாவின் ஐடி துறைக்கு தேவைப்படுகிறது. இந்தியா சுதந்திரம் பெற்றதன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறோம். புதிய இலக்குகளை நிர்ணயித்து அதனை நாம் அடைய வேண்டும்.

சுதந்திரம் பெற்றதன் 100வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடும் போது, இந்தியா உலகத்துக்கு தலைமை வகிக்க வேண்டும். நமது தொழில்நுட்பம் உலகை ஆள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .