Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 பெப்ரவரி 07 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மிகப்பெரிய இக்ளூ உணவகமானது ஜம்மு காஷ்மீரின் பனிப்பிரதேசமான குல்மார்க் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்டுள்ளது.
இக்லூ (Igloo) என்பது பனிக்கட்டிகளைக்கொண்டு கட்டப்படும் வீடுகளாகும். ஆர்க்டிக் பகுதிகளில் வாழ்கின்ற எஸ்கிமோவர்கள் இவ்வாறான வீடுகள் கட்டப்படுகின்றன.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் சுமார் 37 .5 அடி உயரமும் 44 .5 அடி அகலமும் கொண்ட பனியால் குறித்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வுணவகத்தில் சுமார் 40 பேர் வரை அமர்ந்து உணவு உண்ணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் இதுபோன்ற சில உணவகங்கள் இருப்பதை அறிந்து தாம் உலகின் மிகப் பெரிய பனிவீடு உணவகத்தை அமைக்க திட்டமிட்டதாகவும் தற்போது இவ்வுணவகமானது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளதாகவும் இதனை வடிவமைத்த சையத் வாசிம் ஷா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago