Editorial / 2022 ஜனவரி 25 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருப்பூர் மாவட்டம் நரசிங்காபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 58). நெசவுத் தொழிலாளி. இவருடைய மனைவி ஈஸ்வரி (58). இவர்களது மகன் தினேஷ்குமார் (29). இவர் ராஜஸ்தானில் வேலை பார்த்து வருகிறார். நெசவு தொழில் செய்யும் கணேசனுக்கு அவருடைய மனைவி ஈஸ்வரி உதவியாக இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தம்பதி இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். பின்னர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஈஸ்வரியை கணேசன் எழுப்பி உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் அவர்களுக்குள் கைகலப்பானது.
இதனால் ஆத்திரமடைந்த கணேசன் அருகில் கிடந்த கல்லை எடுத்து மனைவியின் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதில், பலத்த காயமடைந்த ஈஸ்வரி இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். சம்பவம் தொடர்பாக மடத்துக்குளம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.
25 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
5 hours ago