2025 ஜூலை 16, புதன்கிழமை

“உள்ளாடைகளை திருடுவதில் பிரியம்”

Freelancer   / 2023 நவம்பர் 09 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் உள்ளத்தை திருடும் இளைஞர்களை கேள்விப்பட்டு இருப்போம். உள்ளாடைகளை திருடும் இளைஞர்களை பார்த்து இருப்போமா? இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தாம்பரம் பகுதியில் இரவு நேரத்தில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் கத்திமுனையில் பாலியல் சீண்டல்களில் ஒரு நபர் ஈடுபட்டு வருவதாக சேலையூர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது..

அதன் அடிப்படையில் பொலிஸார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கெமராக்களை ஆய்வு செய்தனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்களும் இரவு நேரத்தில் ரகசியமாக கண்காணித்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு நாள் நள்ளிரவில் சந்தேகப்படும்படி அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு வாலிபரை கண்கானித்த மக்கள் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அவன் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் ​பொலிஸார் விசாரணை நடத்திய போது, இவருக்கு ஒரு வினோதமான ஆசை. பெண்களின் உள்ளாடைகளை திருடி தனது அறைக்கு கொண்டு சென்று தன் அருகே வைத்து கொண்டு தூங்குவான். மறுநாள் அதை குப்பையில் வீசி விடுவான். மீண்டும் அதேபோல் திருடுவான். மேலும் நள்ளிரவில் பெண்களை சீண்டும் மர்ம நபர் அவன்தான் என்பதும் அதற்காக வீடுகளில் தனியாக இருக்கும் 10ற்கு மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X