2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

உள்ளாடைகள் அணிந்துள்ள ஆபாச தாலி!

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 31 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

திருமணமான பெண்கள் அணியும் 'மங்கல்சூத்ரா' எனப்படும் தாலி தொடர்பான விளம்பரத்தை ஆபாசமாக எடுத்துள்ளதாக, பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யாசாச்சி முகர்ஜிக்கு, வழக்கறிஞர் ஒருவர் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.

நம் நாட்டின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யாசாச்சி முகர்ஜி, சமீபத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் அணியும் தாலி தொடர்பானது. அந்த விளம்பரம்.'வக்கீல் நோட்டீஸ்'அது, ஒரே பாலினம் மற்றும் பல பாலின உறவுகளை குறிப்பிடும் வகையில் இடம்பெற்றிருந்தது.

மேலும், அதில் இடம்பெற்றுள்ள பெண்கள் சிலர் உள்ளாடைகள் மட்டுமே அணிந்து உள்ளனர். இந்த விளம்பரத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த அஷுதோஷ் துபே என்ற வழக்கறிஞர், சபயாசாச்சி முகர்ஜிக்கு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது குறித்து சமூக வலைதளத்திலும் அவர் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது: தாலி என்பது இந்திய மற்றும் ஹிந்து பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஓர் ஆபரணம். அறிவியல் பூர்வமாகவும் இதன் பலன் குறித்து பல கருத்துகள் உள்ளன. அறிவியல் முறைப் பாரம்பரியம் மற்றும் அறிவியல் முறைப்படி, உள்ளாடைகளுக்கு உள்ளே, பெண்கள் அணியும் தாலி இருக்க வேண்டும். விளம்பரம் என்ற பெயரில் ஆபாசத்தை அள்ளித் தெளித்து, நிர்வாண படங்கள் வெளியிடப்பட்டுஉள்ளன. இது ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. அவற்றை உடனே நீக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .