A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை
'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதுரையில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். மதுரையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:
"இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் தொடங்கிய கட்சி 'மக்கள் நீதி மய்யம்'. பிரசாரத்தை இங்கிருந்து தொடங்குவதுதான் சரியாக இருக்கும் என்பதால் இங்கு தொடங்குகிறோம். கடைசி நிமிடத்தில் சில அனுமதிகள் மறுக்கப்பட்டாலும், நான், ஏற்கெனவே சொன்னதுபோல், பொங்கி வரும் புது வெள்ளத்துக்கு முன்னால் சிறு மடைகள் தடை ஆகமாட்டா.
நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டு எப்படியெல்லாம் பிரசாரத்துக்குத் திட்டமிட்டு இருந்தோமோ, அதன்படியே எங்கள் பிரசாரம் இருக்கும். சில இடங்களில் மட்டுமே தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. எங்களுக்குத் தடைகள் புதிதல்ல.
விதிகளுக்கு உட்பட்டுதான் செயல்படுவதாக இருக்கிறோம். அதை மீறும் எண்ணம் எங்களுக்கு இல்லை. யாருக்கெல்லாம் எங்களது கருத்து குத்தலாக இருக்கிறதோ அவர்கள் தடை செய்வார்கள்".
அதனைத் தொடர்ந்துமேலும் பத்திரிகையாளர்கள், "மக்கள் நீதி மய்யமும், ஆன்மிக அரசியலும் ஒன்றாகக் களமிறங்க வாய்ப்பு உள்ளதா?” என்ற கேள்வியை முன்வைத்தனர்.
அதற்குக் கமல் பதில் அளிக்கையில், "முன்பே சொல்லியிருக்கிறேன். அணிகள் பிளவுபடும், அணிகள் கூடும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்" என்று தெரிவித்தார்.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
47 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
59 minute ago