2025 ஜூலை 31, வியாழக்கிழமை

எடையைக் குறைத்தால் போனஸ்

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 11 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபல தொழில் நுட்ப நிறுவனமான செரோதாவின் (Zerodha) இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான `நிதின் காமத்` தனது ஊழியர்களின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு புதிய அறிவிப்பொன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

குறித்த அறிவிப்பில் ”வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் ஊழியர்கள் தங்களது சராசரி உடல் நிறை குறியீட்டு எண்ணை 24க்கு கீழ் கொண்டு வர முடிந்தால் நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் போனஸாக மேலும் அரை மாதம் ஊதியம் வழங்கப்படும் ”என்று தெரிவித்துள்ளார்.

 மேலும் அனைத்து ஊழியர்களின் கூட்டு பிஎம்ஐ 25க்குக் குறைவாக இருந்தால், ஒவ்வொருவரும் மற்றொரு அரை மாதச் சம்பளத்தை போனஸாகப் பெறத் தகுதி பெறுவார்கள் என அறிவித்துள்ளார்.

அத்துடன் பிற நிறுவனங்களையும் இதுபோன்ற சவால்களை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ள காமத், இருப்பதிலே குறைவான உடல் நிறை குறியீட்டு எண்ணை கொண்டவர்களோ, அல்லது அதிகளவில் உடல் நிறை குறியீட்டு எண்ணில் மாற்றம் கண்டவர்களோ வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அவரது இந்த அறிப்பானது வரவேற்பை பெறுவதற்குப் பதிலாக கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது. குறிப்பாக ”உங்கள் போனஸை பெறப் பல ஊழியர்கள் பட்டினி கூடக் கிடக்கலாம். வெளிப்புற தோற்றத்தை அளவிடும் முன்பு, உட்புறத்தை ஆராய்ந்து பாருங்கள்” என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் ”ஜெரோதா நிறுவன ஊழியர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டே இந்த போட்டியை அறிவித்ததாகக்” கூறியுள்ள அவர், கடந்த ஆண்டும் சிறந்த ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக தனது பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான லாட்டரி போட்டியை நடத்தியிருந்நதாகவும், தற்போதும் யோகா மற்றும் மன நல ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும்” தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .