2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

எதிர்க்கட்சிகளை சாடிய மோடி

Freelancer   / 2022 மார்ச் 05 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பாதுகாப்பு படையினரும், பொதுமக்களும் பிரச்சினைகளை சந்திக்கும்போது நிலைமையை மோசமாக்க எதிர்க்கட்சிகள் அனைத்து முயற்சியையும் செய்கின்றன. அதை நாம் கொரோனா காலத்திலும் பார்த்தோம் தற்போது உக்ரைன் விவகாரத்திலும் பார்க்கிறோம். உக்ரைன் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், ஏற்ககெனவே 6 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில், தேர்தலையொட்டி உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் பாஜக மூத்த தலைவரும், இந்திய பிரதமருமான நரேந்திரமோடி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அங்கு அவர் தெரிவித்தாவது, “உத்தரபிரதேச மக்கள் குடும்ப அரசியலை விரும்பவில்லை. உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைக்கும். நாட்டின் முன் திடீரென எதிர்பாராத சவால்கள் வரும்போது குடும்ப அரசியல் செய்பவர்கள் அதில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். 

குருட்டுத்தனமான தொடர்ச்சியான எதிர்ப்பு, கடுமையான விரக்தி, எதிர்மறையான எண்ணங்கள் எதிர்க்கட்சிகளின் அரசியல் சித்தாந்தங்களாக உள்ளன. 

கடந்த 2 ஆண்டுகளாக 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், ஒட்டுமொத்த உலகமும் ஆச்சரியமடைகிறது. ஆனால், ஏழை மக்கள் மகிழ்ச்சியடைந்ததால் நான் மகிழ்ச்சியடைந்தேன்.  

வீட்டில் கழிப்பறை இல்லாத ஏழைத் தாய் படும் கஷ்டம் அரண்மனைகளில் வசிப்பவர்களுக்குத் தெரியாது. சூரிய உதயத்துக்கு முன்னர் இயற்கையின் அழைப்பிற்கு பதிலளிப்பது பற்றி அவர்கள் யோசிக்க வேண்டும் அல்லது நாள் முழுவதும் வலியை தாங்கிக்கொண்டு சூரிய அஸ்தமனத்துக்கு பின்னர் மட்டுமே செய்ய வேண்டும்“ என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .