Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 நவம்பர் 09 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருவனந்தபுரம் :
பேபி அணைக்கு அருகே உள்ள மரங்களை வெட்ட அனுமதி அளித்து, கேரள அரசாங்கம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சியினர் நேற்று வெளிநடப்பு செய்தனர்.
கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கம்யூனிஸ்ட் தலைமையிலான, ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு முல்லை பெரியாறு அணைக்கு அருகேயுள்ள பேபி அணையை வலுப்படுத்த, அதன்கீழ் உள்ள மரங்களை வெட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசாங்கம் வைத்திருந்தது.
தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, பேபி அணையின் கீழே உள்ள 15 மரங்களை வெட்ட, கேரள வனத்துறை சில நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது. இந்த உத்தரவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மரங்களை வெட்ட அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைப்பதாக, கேரள அரசாங்கம் நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில் கேரள சட்டசபை நேற்று காலை கூடியது. அப்போது வனத்துறையின் சர்ச்சைக்குரிய உத்தரவு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
மேலும் இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. வனத்துறையின் உத்தரவை ரத்து செய்வதற்கு பதிலாக, அதை நிறுத்தி வைப்பதாக கேரள அரசாங்கம் அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பிய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.,க்கள், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர்.அவர்களது கோரிக்கையை சபாநாயகர் ஏற்காததால், அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர்.
2 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago