2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

’எந்தவொரு சமூகத்தையும் காயப்படுத்தாமல் எடுத்திருக்கலாம்’

Nirosh   / 2021 நவம்பர் 14 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்த ஒரு சமூகத்தையும் காயப்படுத்தாமல் ஜெய்பீம் படத்தை எடுத்திருக்கலாம் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாலை தெரிவித்துள்ளார். 

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ஓர் உண்மைச் சம்பவத்தை எடுத்துள்ளார்கள். நீதியரசர் சந்துரு ஐயா வாழ்க்கையை இந்தப் படத்தில் டெபிக்ட் பண்றாங்க. சில இடங்களில் உண்மை நிகழ்வை சரியாக காட்டியிருக்கலாம். குறிப்பாக அந்தப் பெயர்கள், அந்த சமுதாயம் அதெல்லாம்கூட சரியாக சொல்லியிருக்கலாம்.

சிறப்பான படம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக, அந்த உண்மை நிகழ்வை சரியான பெயர்களை சூட்டி, எந்த ஒரு சமுதாயத்தையும் கூட காயப்படுத்தாமல் அந்த மெஸேஜை சொல்லியிருக்கலாம் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.” எனவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .