2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

எனது தலைமையில் தான் கூட்டணி

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுக்கோட்டை:

எனது தலைமையில் தான் கூட்டணி. இதற்கு மேல் அரசியல் வியூகங்கள் எல்லாவற்றையும் இப்போதே சொல்லிவிட முடியாது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் கமல் பேசியதாவது:

ரஜினி ஹைதராபாத்தில் இருக்கும்போது பேசினேன். பரப்புரையில் இருப்பதால் அவரிடம் பேச முடியவில்லை. சென்னை திரும்பியதும் நேரில் சந்தித்துப் பேசுவேன். உடல் ஆரோக்கியத்தைக் காரணமாக வைத்து அவர் முடிவு எடுத்திருந்தால் அந்தக் கருத்தில் உடன்படுகிறேன். வேறு காரணம் ஏதும் இருக்குமா எனத் தெரியவில்லை.

தனிப்பட்ட முறையில் மரண தண்டனையை நான் ஏற்கவில்லை. பாலியல் வன்முறைகளுக்கு, ஆண் என்ற இலட்சணங்களையும் பெண் என்ற இலட்சணங்களையும் மாற்றி சொல்லித்தர வேண்டும் என்பதுதான் தீர்வாக இருக்க முடியும். அதற்கேற்ப கல்வி முறைகளிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

தற்போது ஆட்சியில் இருப்பதால், தவறுகளைத் தடுக்க வேண்டும் என்பதால் அவர்களைப் பேசி வருகிறேன். அதற்காக திமுக செய்த தவறுகளை ஏற்பதாகவும் கிடையாது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .