2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’எனது படிப்புக்காக நாவற்பழம் விற்கிறேன்’

A.K.M. Ramzy   / 2021 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரைக்குடி

கொரோனாவின் தாண்டவமும் மாணவ சமுதாயத்தின் கல்வியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு மத்தியில் வறுமை தலைவிரித்தாடுகிறது. காரைக்குடி அருகே தந்தையை இழந்த பிளஸ் 2 மாணவி குடும்ப வறுமையால் நாவற்பழம் விற்பனை செய்து தனது ஒன்லைன் கல்வியை தொடர்ந்து வருகிறார்.

காரைக்குடி அருகே நைனா பட்டியைச் சேர்ந்த,இவர் கானாடுகாத்தானில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். தந்தை இறந்தநிலையில், அவரது சகோதரர் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். இருந்தபோதிலும் போதிய வருமானம் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.

குடும்ப வறுமை காரணமாக மாணவி அஞ்சுகா நாவற்பழம் விற்பனை செய்கிறார். தற்போது கொரோனாவால் பாடசாலை மூடியிருப்பதால் ஒன்லைனில் வகுப்புகள் நடக்கின்றன.

 

இதனால் அஞ்சுகா மொபைல் போன் மூலம் ஒன்லைனில் படித்துக்கொண்டே பழங்களை விற்பனை செய்து வருகிறார்.

 

இது குறித்து அஞ்சுகா கூறியதாவது: எனக்கு இரண்டு அக்காள், ஒரு அண்ணன், ஒரு தங்கை உள்ளனர். இரண்டு அக் காள்களுக்கு திருமணமாகிவிட் டது. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அண்ணன் மட்டுமே வேலைக்குச் செல்கிறார். இருந்தபோதிலும் வருமானம் பற்றவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக சீசனுக்கு ஏற்ப பழங்களை விற்பனை செய்து வருகிறேன். அதில் கிடைக்கும் பணத்தில் எனது படிப்புச் செலவுக்குப் போக, மீதியை குடும்பத்துக்குக் கொடுப்பேன்.

தற்போது ஒன்லைன் வகுப்புக்காக வாங்கிய மொபைல் போன் கடனையும் அடைத்து வருகிறேன். பாடசாலை திறந்திருந்த காலத்தில் ஓய்வு நேரம், விடுமுறை நாட்களில் வியாபாரம் செய்வேன். தற்போது கொரோனாவால் பாடசாலை  மூடியிருப்பதால் தினமும் பகலில் பழங்களை விற்பனை செய்கிறேன்.

 

இதற்காக அதிகாலை 5 மணிக்கே எழுந்து மானகிரி பகுதி யில் உள்ள மரங்களில் இருந்து நாவற்பழங்களைப் பறித்து வந்து விற்பனை செய்கிறேன், என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X