A.K.M. Ramzy / 2020 நவம்பர் 24 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் சந்திக்கவுள்ள னர்.இச் சந்திப்பின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து, வலியுறுத்தும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதாக பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் செய்தியாள ர்களைச் சந்தித்தார். அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்;
அம்மா அரசு என்று சொல்லிக்கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி, ஆளுநரைச் சந்திக்கும் பொழுது, அவரிடம் பேசி என்னுடைய மகனுக்கு விடுதலை வாங்கித் தரவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
என்னுடைய மகன் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதால் பரோல் கேட்டு அவரை நான் இப்பொழுது பராமரித்து வருகிறேன். என்னுடைய கணவரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆகையால், என் மகனுக்கு நிரந்தர விடுதலை வேண்டும் என்ற கோரிக்கையை மேலும் மேலும் வலியுறுத்தி வருகின்றேன் என்றார்.
என்னுடைய மகன் விடுதலை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதல்வரிடம் வேண்டி கேட்டுக் கொள்வதாகக் கூறிய அவர், அதற்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன் என்றார்.
21 minute ago
26 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
26 minute ago
31 minute ago