2026 மார்ச் 07, சனிக்கிழமை

என் கட்சியில் சேர ரஜினி ரசிகர்கள் விருப்பம்

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 02 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டில்லி

விரைவில் ரஜினி ரசிகர்களைச் சந்திக்க உள்ளதாக ரஜினி மக்கள் மன்ற முன்னாள் நிர்வாகியும், இமமுக நிறுவனருமான அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக, அர்ஜுன மூர்த்தியைத் தனது மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்தார்.

ஆனால், எதிர்பாராத விதமாக ரஜினி கட்சி தொடங்கும் முடிவைக் கைவிட்டதால் அர்ஜுன மூர்த்தி, ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகினார்.

ஆனாலும், ரஜினியின் வழியைப் பின்பற்றுவேன் என்று பேட்டி அளித்த அர்ஜுன மூர்த்தி, இந்திய மக்கள் முன்னேற்றக் கழகம் (இமமுக) என்கிற கட்சியை அண்மையில் தொடங்கினார்.   சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இமமுக போட்டியிட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .