2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

’எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கிறார் கமல்’

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 05 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

  

சென்னை:

அரசியல் பற்றி ரஜினியும் நானும் பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். அவரது நிலைப்பாடு முன்னரே எனக்குத் தெரியும்  என்று தெரிவித்த, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்,ரஜினி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் எனக்கு, ஏற்கனவே தெரியும். ரஜினியின் உடல்நலமும் முக்கியம்; அரசியல் கட்சி பற்றி அவர்தான் முடிவெடுக்க வேண்டுமென்று,   மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேட்டியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ;

3வது அணி அமைந்துவிட்டது. நல்லவர்கள் 3வது அணிக்கு வர வேண்டும். நல்லவர்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள்; அவர்களையும்  அழைக்கிறேன் என்றார்.

நேர்மை ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் வியூகம். நல்லவர்களுடன்தான் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும். நல்லவர்கள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். நல்லவர்கள் வரும்போது 3வது அணியாக இருக்காது; முதல் அணியாக அது இருக்கும்.

நல்லவர்களுடன்தான் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும். கூட்டணி குறித்து பதில் சொல்லக்கூடிய காலம் இது இல்லை. கூட்டணி பற்றி பேசும் தருணம் இதுவல்ல.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. சட்டசபையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும். எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது வேட்புமனு தாக்கலின்போது தெரியும். மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக என்னை அறிவித்து ள்ளனர்என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .