A.K.M. Ramzy / 2021 ஜனவரி 11 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி:
லடாக் எல்லையில் உள்ள பொன்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் கடந்த 8ஆம் திகதி இந்திய இராணுவத்தினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, இந்திய எல்லைக்குள் சீன இராணுவ வீரர் நுழைவதை இந்திய இராணுவத்தினர் கண்டனர். இதனால், எல்லைதாண்டிய சீன வீரரை சுற்றிவளைத்த இந்திய இராணுவத்தினர் அந்த வீரரை பிடித்தனர்.
இதையடுத்து, பிடிபட்ட சீன வீரரிடம் இந்திய இராணுவத்தினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சீன வீரர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சீன பாதுகாப்பு படையினருக்கு இந்திய படையினர் தகவல் கொடுத்தனர். கைது செய்யப்பட்ட அந்த வீரரை இந்திய அதிகாரிகள் சீனாவிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டது.
இதனையடுத்து அந்த வீரரை சீனாவிடம் ஒப்படைக்கும் நடைமுறைகளை இந்திய இராணுவம் மேற்கொண்டது.
அதன்படி, இன்று காலை 10.10 மணியளவில் அந்த வீரர், சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
19 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
8 hours ago
9 hours ago