2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

எல்லைப் பாதுகாப்பை அதிகரித்தது இந்தியா

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 18 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேஜ்பூர் :

 அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் சீனாவுடனான எல்லை பகுதியில் பகல்-இரவு நேர கண்காணிப்பை இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் அதிகரித்துள்ளனர்.

கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு சீன இராணுவம் அத்துமீறியதை தொடர்ந்து சீனாவுக்கும் நமக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லையில் படைகளை இரு நாடுகளும் குவித்துள்ளன. நம் நாட்டின் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள எல்லையிலும் சீன இராணுவ வீரர்கள் சமீபத்தில் அத்துமீறி நுழைந்தனர். அங்கிருந்த இராணுவ நிலைகளை சேதப்படுத்தினர். சீன வீரர்களை  நம் இராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர்.

இந்நிலையில் அருணாச்சலில் சீனாவுடனான எல்லை பகுதியில் பகல் - இரவு நேர கண்காணிப்பை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அதிகரித்துள்ளனர். 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வழியாக எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியை கண்காணித்து சீனாவின் எந்த அத்துமீறலையும் முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .