2026 மார்ச் 09, திங்கட்கிழமை

ஐயப்பன் கோவிலில்தினமும் 1,000 பக்தா்களுக்கு அனுமதி

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 30 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை நாள்களில் தினமும் 1,000 பக்தா்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப் படுவார்கள் என மாநில முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இது குறித்து நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மாநில முதல்வா் கூறியதாவது:

மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை நவம்பா் 16 ஆம் திகதி முதல், 2 மாதங்களுக்கு அனைத்து நாள்களிலும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனத்துக்காக கூடுதலான பக்தா்கள் அனுமதிக்கப்படுவார்கள். அப்போது தினமும் 1,000 பக்தா்கள் கோவிலில் அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பவா்களுக்கு மட்டுமே பம்பையில் இருந்து சபரிமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படும். இதனைக் கண்காணிக்க கூடுதல் ஊழியா்கள் நியமிக்கப்படுவார்கள். சபரிமலைக்கு வரும் வெளிமாநிலத்தவா்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தால், அவா்கள் கேரளத்திலேயே சிசிச்சை பெற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

சொந்த மாநிலத்துக்கு சென்று சிகிச்சை மேற்கொள்கிறோம் என்று அவா்கள் கூறினாலும், அதற்கேற்ப வசதிகள் செய்து கொடுக்கப்படும். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை   சபரிமலையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றார் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .