Ilango Bharathy / 2021 டிசெம்பர் 12 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை 2 மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக நிபுணர்கள் உருவாக்கி உள்ளனர்.
தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரோன் வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது.
இத் தொற்றானது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் அதனைத் தடுக்க உலகளவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் இத் தொற்று ஏற்பட்டிருப்பதை 2 மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் பரிசோதனை கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக நிபுணர்கள் உருவாக்கி உள்ளனர்.
நீர் பகுப்பாய்வு அடிப்படையில் இப் பரிசோதனைக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் ஒமைக்ரோன் பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை 2 மணி நேரத்தில் கண்டறிய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கருவியானத நூறு சதவீதம் துல்லியமானது எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago