2025 மே 10, சனிக்கிழமை

ஒரு இலட்சம் இருந்தும் சாப்பிடாது மரணித்த யாசகர்

Mayu   / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

குஜராத் மாநிலத்தில் பிச்சைக்காரர் ஒருவர் சாப்பிட உணவுக்கே வழியில்லாமல் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. ஆனால் அவரிடம் கத்தை கத்தையாக ஒரு இலட்சத்து 14ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவரது பெயர் உள்ளிட்ட தகவல்கள் இதுவரை உறுதியாகவில்லை. இருப்பினும், அவரது மரணம் அப்பகுதியில் உள்ள பொலிஸார் இடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

50 வயதான அந்த நபர் வல்சாத் என்ற அந்த பகுதியில் பிச்சை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. உணவு இல்லாமல் அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக ரொம்பவே மோசமாகி இருக்கிறது. தகவல் கிடைத்தவுடன் அவரை மீட்ட பொலிஸார்இ வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும்இ சிகிச்சை பலனின்றி யாசகர் மரணமடைந்துவிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X