Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 09 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் தீயில் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டம், தளவபுரம் வர்கலா நகரை சேர்ந்தவர் பிரதாபன்.
62 வயதான இவர் அப்பகுதியில் உள்ள சந்தையில் காய்கறி கடை நடத்தி வந்ததோடு, தனது மனைவி செர்லி ,மூத்த மகன் அகில் , மருமகள் அபிராமி மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆகியோருடன் வர்கலா நகரில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து நேற்று(08) அதிகாலை 1.45 மணி அளவில் கரும்புகை வெளியேறுவதைப் பார்த்த சிலர் வீட்டுக்குள் தீ எரிந்து கொண்டிருப்பதை அறிந்து, இது குறித்து பொலிஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் வீட்டுக்குள் சென்றுபார்த்த போது அங்கு ஐவரும் தீயில் கருகிய நிலையில் உயிரிழந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து மின்கசிவு ஏற்பட்டு இருக்குமா என பரிசோதனை செய்ததாகவும், ஆனால் அங்கு மின் கசிவு ஏற்பட்டமைக்கான எவ்வித வாய்ப்பும் இல்லை என அவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனால், 5 ஐவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், வீடு தீப்பற்றியதை அறிந்து வேகமாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தபோது வீட்டின் அருகே இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக சென்றதாக நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர்.
இதனால், இது கொலை சம்பவமாக இருக்கலாமா? என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago