2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

ஒற்றைக் காகத்தால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 30 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக மாநிலத்தில்  ஒப்லாபுரா என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடந்த ஆறு மாதங்களாக காகமொன்றிற்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கியுள்ள சம்பவம் வியப்பபை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கிராமத்தில் இருக்கும் காகம் ஒன்று அப்பகுதியிலேயே நடந்து செல்பவர்கள், சிறுவர்கள் , மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் எனப் பலரையும் விரட்டி, விரட்டி கொத்திவிட்டு பறந்து செல்வதாகக் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக அப்பகுதியில் இருக்கும் பெரும்பாலனவர்களுக்கு தலையில், முகம் உள்ளிட்ட இடங்களில்  காயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டள்ளது.

மேலும், இதுபோல அட்டகாசம் செய்யும் அந்த ஒற்றை காகத்தை பிடிக்க கிராமமே முயன்ற போதும் அவர்களால் அதனை பிடிக்க முடியவில்லை. இதனாலேயே அக்கிராமத்தில் இருக்கும் மக்கள் அக்காகத்திற்கு பயந்து தலையில் துண்டு கட்டி வெளியே செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .