2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

கடந்த 2 மாதங்களில் 56 பொலிஸார் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 மார்ச் 03 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2 மாதங்களில் 56 பொலிஸார் தமிழகத்தில்  உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காவல் துறையில், சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர்.

எனினும் மன அழுத்தம், தூக்கமின்மை, வேலைப் பளு மற்றும் விடுமுறை மறுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொலிஸாருக்கு எளிதில் உடல் நலக்குறைவு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் இவ் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பெப்ரவரி மாதம் வரை 56 பொலிஸார் உயிரிழந்துள்ளனர் எனவும், இவர்களில், இருவர் கொரோனா மற்றும் புற்றுநோயினாலும், 9 பேர் மாரடைப்பினாலும், 10 பேர் தற்கொலை செய்தும், 12 பேர் விபத்தில் சிக்கியும், 23 பேர் உடல்  நலக் குறைவினாலும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .