2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம்

Freelancer   / 2022 பெப்ரவரி 01 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், இன்று முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் இன்று முதல் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

கடற்கரைக்கு தங்களது குடும்பங்களுடன் வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். 

இதனை கண்காணிக்க மாநகராட்சி பணியாளர்கள், பொலிசார் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .