2025 ஜூலை 16, புதன்கிழமை

கடும் சரிவை சந்திக்கும் குழந்தை பிறப்பு வீதம்

Freelancer   / 2023 நவம்பர் 28 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறப்பு வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிறந்தவர்களின் எண்ணிக்கையை அளவிடும் முறையாகும்.

இந்தியாவில் இயற்கை வளங்கள் மிகுந்த மாநிலமாக திகழ்வது கேரள மாநிலம். மக்கள்தொகை பெருக்கத்திலும் அது பெரிய மாநிலமாகவே இருக்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 33 மில்லியன் மக்களுடன், மக்கள்தொகையில் 13-வது பெரிய மாநிலமாக கேரளா இருந்தது.

இந்நிலையில் தற்போது அங்கு குழந்தை பிறப்பு வீதம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. கேரள மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு வீதம் அதிகரிப்பு பெரிய அளவில் இருந்தது. அந்த ஆண்டில் அங்கு 5 லட்சத்து 60 ஆயிரத்து 268 குழந்தைகள் பிறந்துள்ளன.

ஆனால் அதன்பிறகு குழந்தைகள் பிறப்பு வீதம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு 4 லட்சத்து 80 ஆயிரத்து 113 குழந்தைகளே பிறந்துள்ளன. 2021-ம் ஆண்டில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 767 குழந்தைகளே பிறந்துள்ளன.

2011-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021-ம் ஆண்டில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 501 குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளன. இது 25 சதவீதம் குறைவாகும். கடந்த 10 ஆண்டுகளில் கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X