A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மாநகராட்சி செயலாளர் கட்சியின் சின்னமான ‘டொர்ச் லைட்' சின்னத்தினை தனது ஆட்டோவில் பொருத்தியுள்ளார்.
இவ்வாறு வடிவமைக்கப்பட்ட தனது ஆட்டோ வினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனிடம் காண்பித்து வாழ்த்து பெறுவதற் காக சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.
அப்போது கமல்ஹாசன், மாநகராட்சி செயலாளரை வெகுவாக பாராட்டியதோடு, கட்சியின் சின்னத்துடன் கூடிய ஆட்டோவினைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மேலும் கமல்ஹாசன் அந்த வாகனத்தில் அமர்ந்து ஆட்டோவின் இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்த தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026