Ilango Bharathy / 2022 நவம்பர் 17 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான சிறுமியொருவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் மணி என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார்.
எனினும் கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி அச்சிறுமியை முச்சக்கர வண்டியொன்றில் கடத்திச்சென்ற மணி, சமயபுரம் கோவிலில் வைத்து கட்டாயத் தாலி கட்டியுள்ளார்.
இதனையடுத்து பெரும் போராட்டத்துக்கு மத்தியில் மணியிடம் இருந்து அச்சிறுமியை அவரது பெற்றோர் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று அப்பகுதில் உள்ள ஓடைக்குத் தனியாக ஆடைகளைத் தோய்க்கச் சென்ற சிறுமியை பின் தொடர்ந்த மணியின் உறவினரான மாரிமுத்து என்பவர், தொலைபேசியில் சிறுமியுடன் மணி நெருக்கமாக இருக்கு வீடியோவொன்றைக் காட்டி, 18 வயது ஆனவுடன் மணியிடம் வந்து விட வேண்டும், இல்லையெனில் குறித்த வீடியோ இணையத்தில் வெளியிட்டு விடுவேன்” என மிரட்டியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி, வீட்டிற்குச் சென்று கடிதம் எழுதி வைத்து விட்டு,பூச்சி மருந்தை உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மாணவி எழுதி வைத்துள்ள கடிதத்தில் ”தன்னை முச்சக்கர வண்டியொன்றில் கடத்திச்சென்று அரை மயக்கத்தில் தாலி கட்டிவிட்டு, விரும்பியே மணியுடன் தான் சென்றதாக மிரட்டி சொல்ல வைத்ததாகக்” குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மணியுடன் அந்தரங்கமாக இருந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக தன்னை மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் பொலிஸார் ராமசாமி, மாரிமுத்து ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026