Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 பெப்ரவரி 13 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்ணொருவர் தனது மகனுடன் இணைந்து தனது கணவனைக் கொலை செய்துவிட்டு , சடலத்தை 7வது மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் அம்போலி பகுதியை சேர்ந்தவர் சாந்தனுகிருஷ்ண சேஷாத்ரி (54). இவர் தனியார் நிறுவனமொன்றில் உதவி பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி ஜெய்ஷீலா, மகன் அரவிந்த் (26). பொறியல் பட்டதாரி.
இந்நிலையில் கடந்த 10 ஆம் திகதி சேஷாத்ரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது மனைவி ஜெய்ஷீலா மற்றும் மகன் அரவிந்த் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்ப இடத்திற்கு வந்த பொலிஸார் , சேஷத்ரியின் மனைவி மற்றும் மகனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்களால் சந்தேகமடைந்த பொலிஸார் ஜெய்ஷீலா மற்றும் அரவிந்திடம் நடத்திய குறுக்கு விசாரணையில்,
சேஷாத்ரிக்கும் அவரது மனைவி மற்றும் மகனுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளதாகவும் இதனால் ஆத்திரமடைந்த மனைவி சேஷாத்ரியின் தலையை கட்டிலில் முட்டி பலமாக தாக்கி உள்ளதாகவும் இதில் பலத்த காயமடைந்த சேஷாத்திரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பயந்துப்போன ஜெய்ஷீலா மற்றும் அரவிந்த் சேஷாத்ரி உடலை 7ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசி தடயத்தை அழிக்க முயன்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
33 minute ago
51 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
33 minute ago
51 minute ago
55 minute ago