2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

கணவனின் தலையுடன் சென்ற பெண்

Editorial   / 2022 ஜனவரி 23 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவனை கொலை செய்த மனைவி கணவனின் தலையை வெட்டி பையில் போட்டுக்கொண்டு தலையுடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவை சேர்ந்தவர் ரவி சந்த் சூரி (55 வயது) இவரது மனைவி வசுந்தரா. திருமணமாகி 30 வருடங்கள் கடந்த நிலையில் இந்த தம்பதிக்கு மகன் ஒருவன் உள்ளார்.

மகனுக்கு மனநிலை சரியில்லாத நிலையில் மிகுந்த மன உளைச்சலில் வசுந்தரா இருந்து வந்துள்ளார். ஆனால் மனநிலை பாதிக்கப்பட்ட மகனை கணவன் ரவிசந்த் சூரி பார்த்துக் கொள்ளாமல் முறையற்ற தொடர்பு காரணமாக அலட்சியமாக இருந்துள்ளார். இதனை பலமுறை வசுந்தரா கண்டித்துள்ளார். இதுதொடர்பாக கணவன் மனைவியிடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு அடிதடி வரை சென்றுள்ளது.

இந்நிலையில் கணவனின் முறையற்ற தொடர்பு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை மீண்டும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வசுந்தரா கணவன் ரவிசந்த் சூரியை பலமாகத் தாக்கியுள்ளார். பின்னர் கத்தியால் கணவனின் கழுத்தை அறுத்த வசுந்தரா கணவனின் தலையை பையில் எடுத்து போட்டுக்கொண்டு   ரேணிகுண்டா ​​பொலிஸ் நிலையத்திற்கு நடந்து சென்று சரணடைந்துள்ளார்.

அதிர்ந்த காவலர்கள்  இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர். கணவனின் முறையற்ற தொடர்பு ஒருபுறம், மனநிலை பாதிக்கப்பட்ட மகனைச் சரியாக பராமரிக்காத முடியாத நிலை மறுபுறம் என மன உளைச்சலில் தான் கொலை செய்ததாக வசுந்தரா ஒப்புக்கொண்டார். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த ​பொலிஸ் அவரை சிறையில் அடைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .