A.K.M. Ramzy / 2021 ஜனவரி 03 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
முத்தலாக் சட்டப்படி முஸ்லிம் ஆண் மீது மட்டுமே குற்றம் சாட்டலாம்; அவரது தாய் உட்பட உறவினர்கள் மீது குற்றம் சாட்ட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் வடக்கு பரவூர்பொலிஸ் நிலையத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் தனது கணவர் முத்தலாக் கூறி தன்னை விவாகரத்து செய்ததாக புகார் அளித்தார். இதன் பேரில் அப்பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் கணவரின் தாயார் மீது முத்தலாக் தடை சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கு முன் பிணை வழங்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து கணவரின் தாய் ரஹ்னா ஜலால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதன் பிறகு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
முஸ்லிம் ஆண் ஒருவர் தனது மனைவியிடம் தலாக் கூறுவது, முத்தலாக் தடை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் குற்றமாகும். இந்த சட்டத்தின் 4ஆவது பிரிவின் கீழ் அவருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க முடியும். இந்த சட்டத்தின் கீழ் முஸ்லிம் ஆண் மீது மட்டுமே குற்றம் சாட்ட முடியும். அவரது தாய் மீது குற்றம் சாட்ட முடியாதுஎன்றார்.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026