2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

கணவனுக்கு காதலியை மணந்து கொடுத்த மனைவி

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 11 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவகாரத்து பெற்றுக்கொடுத்து, தனது கணவரை, அவரது காதலியுடன் சேர்த்து வைத்த சம்பவமொன்று போபாலையில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின், போபாலைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் அவரது கணவர், தான் காதலியை திருமணம் செய்து கொள்ள நினைத்துள்ளார். இதனால் தனது மனைவியிடம் விவாகரத்து பெறாமலேயே காதலியுடன் வாழ நினைத்துள்ளான்.இதனை அறிந்த மனைவி,இது சட்டப்படி நியாயம் இல்லை என்பதால், மனைவி விவாகரத்து கொடுக்க நினைத்துள்ளார்.

இதையடுத்து, கணவருக்கு விவாகரத்து கொடுத்து காதலியை திருமணம் செய்ய உதவியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் கூறுகையில், அந்தப் பெண்ணின் முடிவை பலரும் பாராட்டியுள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவிய தையடுத்து, பலரும் அந்தப் பெண்ணுக்கு ஆறுதலை தெரிவித்துள்ளனர்.அந்தப் பெண்ணின் கணவருக்கு அதிகமானோர் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .