2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கணவன் மரணத்தை அறிந்த மனைவி திடீர் மரணம்

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 15 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,

செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் கெங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 80). இவருடைய மனைவி பானுமதி (70). இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் உறவினர் ஒருவரின் ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.  

கடந்த 6 ஆண்டுகளாக முடக்குவாத நோயால் படுத்த படுக்கையாக கிடந்த ராமலிங்கம், திடீரென உடல்நிலை மோசமடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டிலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியில் உறைந்துபோன பானுமதி, தன்னை இந்த வயதிலும் உயிருக்கு உயிராக நேசித்து வாழ்ந்த கணவர் ராமலிங்கத்தின் மரணம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. கணவர் தன்னைவிட்டு பிரிந்து விட்டாரே என்ற துயரத்தில் கணவரின் உடல் அருகே அழுது கொண்டிருந்த பானுமதியும் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.

பின்னர் கணவன்-மனைவி இருவரின் உடல்களையும் சுடுகாட்டுக்கு எடுத்து சென்று வளர்ப்பு மகன் ஜெயராமன் இறுதிச்சடங்குகளை செய்தார். கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்பத்தியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .