A.K.M. Ramzy / 2020 நவம்பர் 07 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது கணவா் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சியிலிருந்து விலகி விட்டதாக நடிகா் விஜயின் தாயாரும், எஸ்.ஏ. சந்திரகேரின் மனைவியுமான ஷோபா தெரிவித்துள்ளார்.
நடிகா் விஜயின் ரசிகா் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகா் பதிவு செய்துள்ளார்.
இதில் கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகா், பொருளாளராக விஜயின் தாயார் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தை ஆரம்பித்துள்ள கட்சிக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று விஜய் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஷோபாவும் எஸ்.ஏ.சி. கட்சியிலிருந்தும், பொருளாளா் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.
இது குறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் பேசியதாவது: ஒரு மாதத்துக்கு முன்பு அசோசியஸன் ஆரம்பிப்பதாக சொல்லி எஸ்.ஏ.சி. கையெழுத்து வாங்கினார். மீண்டும் அதே மாதிரி ஒரு கையெழுத்து வாங்கினார்.
அசோசியஸன் ஆரம்பிப்பதாக சொன்னதால் கையெழுத்திட்டேன். இப்போது அதை வாபஸ் வாங்கி விட்டேன். அந்தக் கட்சியின் பொருளாளா் பதவியில் இருந்து விலகி விட்டேன்.
விஜய் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. தொடா்ந்து அரசியல் கட்சி பற்றி எஸ்.ஏ. சந்திரசேகா் பேசி வந்த போது, அப்படி பேச வேண்டாம் என எத்தனையோ முறை விஜய் கேட்டுக் கொண்டார்.
அதை அவா் மறுத்ததால், இப்போது எஸ்.ஏ.சி.யுடன் விஜய் பேசுவதில்லை என்று தெரிவித்தார் ஷோபா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .