2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

கண்களைக் கட்டியபடி தேர்தல் பிரச்சாரம்

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.

இன்னும் 13 தினங்களே தேர்தலுக்கு எஞ்சியுள்ளதால் தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வகையான நூதன பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரான சீனிவாசன் என்பவர் தனது    கண்களை கட்டிக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றார்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் இவர் ,வாக்காளர்களின் இல்லங்களுக்குச் சென்று , அப்பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை தீர்த்த பிறகுதான் வாக்காளர்களின் முகத்தை பார்பேன் எனக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கண்களை கட்டியதால் தள்ளாடியபடி சென்ற வேட்பாளரை, கட்சி நிர்வாகிகள் கைத்தாங்கலாக அழைத்துச் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X