2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கத்தி முனையில் ஆட்சேர்ப்பு

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 04 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தூர் :

'மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், கத்தி முனையில் மிரட்டப்பட்டு, திரிணமுல் காங்கிரசில் சேர்க்கப்படுகின்றனர்' என, பாரதிய ஜனதா  குற்றஞ்சாட்டியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், பாரதிய ஜனதா பொதுச் செயலரும், மேற்கு வங்க பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா கூறியதாவது:நம் நாட்டில் கத்தி முனையை பயன்படுத்தியே, இஸ்லாம் பரவியது. முகலாயர் ஆட்சியில், ஹிந்துக்களை கத்தி முனையில் மிரட்டி, இஸ்லாத்துக்கு வலுக்கட்டாயமாக மாறவைத்தனர்.இப்போது, மேற்கு வங்கத்திலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு, கத்தி முனையில் மிரட்டி, அவர்கள் திரிணமுல் காங்கிரசில் சேர்க்கப்படுகின்றனர். யாரும் விரும்பி திரிணமுல் காங்கிரசில் சேரவில்லை. மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா பொறுப்பாளராக இருக்கும் என் மீது மட்டும் திரிணமுல்  அதிகமான வழக்குகளை பதிவு செய்துள்ளது.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லா சர்வாதிகாரியாக மம்தா செயல்படுகிறார். இந்தியாவின் ஜனநாயகத்தை உலகம் பாராட்டுகிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் சிறிதும் இல்லை என, உறுதியாக கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .