2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கனவை நனவாக்கிய பழங்குடி மாணவி

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 04 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோவை :

பழங்குடி மாணவி ஒருவர், நீட் தேர்வில், 202 மதிப்பெண் பெற்று மருத்துவ பீடத்துக்குத் தெரிவாகியுள்ளார்.  கோவை மாவட்டம், நஞ்சப்பனுார் கிராமத்தை சேர்ந்த இம்மாணவியின் தந்தை கடந்தாண்டு இறந்தார். தாய்க்கு பார்வை குறைபாடு உள்ளது.

2018ஆம் ஆண்டு பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற இம்மாணவி மருத்துவராகும் கனவில், 'நீட்' தேர்வு எழுதினார். இதில், 100க்கும் குறைவாக மதிப்பெண் பெற்றதால் மருத்துவராகும் கனவு தகர்ந்தது. இந்நிலையில், மருத்துவராகும் முயற்சியை மீண்டும் மேற்கொண்டார். தற்போது, நீட் தேர்வில், 202 மதிப்பெண்ணைப் பெற்றுள்ளார்.

மாணவி கூறுகையில்,''மருத்துவராவதே என் கனவு. ஜாதி சான்றிதழ் போன்ற பிரச்சினைகளைப் போராடி வென்று தற்போது, நீட் தேர்வில் 202 மதிப்பெண்ணைப் பெற்றுள்ளேன். நான் மருத்துவரானால், என்னைப்பார்த்து என் சமூகத்தை சேர்ந்த பலரும் கல்வி பயில முன் வருவர்,'' என்றார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .