A.K.M. Ramzy / 2021 ஜனவரி 10 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோவை:
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் பங்கேற்க சென்ற தி.மு.க., எம்.பி., கனிமொழியை கோவையில் பொலிஸார் இன்று தடுத்து நிறுத்தினர்.
இதனை கண்டித்து கனிமொழி, உள்ளிட்ட திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்படைய அனைத்து நபர்களையும் கைது செய்ய வலியுறுத்தி, திமுக மகளிர் அணி சார்பில், அக்கட்சியின் மகளிரணி செயலர் கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் போராட்டம் நடக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் இருந்து பொள்ளாச்சியில் போராட்டம் நடக்கும் இடத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த கனிமொழியின் காரை, ஈச்சனாரி, கற்பகம் கல்லூரி அருகே பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
இதனால், அங்கு பொலிஸாருக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து கனிமொழி உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
பின்னர் பொலிஸாரின் தடையை மீறி, பொள்ளாச்சி சென்று போராட்டத்தில் கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளனர்.
கனிமொழி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
18 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
8 hours ago
9 hours ago