A.K.M. Ramzy / 2020 நவம்பர் 09 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸின் உறவினா்கள், அவரது வெற்றியைக் கொண்டாடி வருகின்றனா்.
இதுகுறித்து அவரது மாமா கோபாலன் பாலச்சந்திரன் கூறியதாவது: கமலா வெற்றி பெறுவார் என்பது நாங்கள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். சிறு வயதிலிருந்தே கமலா, அனைத்து விஷயங்களிலும் ஆர்வம் கொண்டவராய் இருப்பார். சம உரிமை மீது அதீத நம்பிக்கைக் கொண்ட அவரது தாயைப் போலவே வளா்ந்தார்.
இரண்டு நாள்களுக்கு முன்னதாகக் கூட அவரிடம் பேசினேன். அரசியல் பற்றி அல்ல. பொதுவாக எங்களது குடும்ப சூழலைப் பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டோம். எனது மகள் கமலாவுடன் தான் இருக்கிறார். அவரது பிரசாரத்துக்கு எனது மகளும் உறுதுணையாக இருந்தார்.
தோ்தலின் முடிவில், கமலாவின் வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய பலனைத் தரும். அவா்களுக்கு, தங்களுடைய பிரச்சினையை எடுத்துக் கூற சரியான நபா் தேவை. அதனை கமலா மிகச் சரியாக செய்வார் அவருக்கு, ஆபிரிக்க, அமெரிக்கா்களுடனும் பலமான உறவும் உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .