2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

’கமலின் ஆசை நிறைவேறுமா?’

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 07 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை :

 மீண்டும் நாடகங்களில் தான்  நடிக்க ஆசைப்படுவதாக  நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

மகிழ் மன்றம் மற்றும் டம்மீஸ் டிராமா வழங்க, ஸ்ரீவத்சன் நடித்து இயக்கிய, 'விநோதய சித்தம்' மேடை நாடகம், சென்னை நாரதகான சபாவில் நடைபெற்றது. 'இதில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கரத்துகொண்டு உரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் தெரிவிக்கையில்;

'நானும் டி.கே.எஸ்., நாடகக் குழுவிலிருந்து வந்தவன் தான். எல்லாரும் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு போவர். ஆனால், நான் சினிமாவில் இருந்து நாடகத்துக்கு வந்தேன். அந்த நாடகங்கள் பேரனுபவமாக இருந்தன. மீண்டும் என்னை சினிமாவை நோக்கி தள்ளி விட்டதும் நாடகம் தான். மீண்டும் நாடக மேடைக்கு வர ஆசைப்பட்டேன்; யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. நாடக மேடை என்பது மிகச் சிறப்பானது. நான் நாடகத்தின் ரசிகன் என்பதே, என் முதல் தகுதி. நிஜமான திறமையை அடையாளப்படுத்துவது நாடக மேடையே.

சினிமாவில் நான் நடிக்க கூட தேவையில்லை, 'ஹோலோகிராம்' வாயிலாக என் போன்ற உருவத்தை கொண்டு வந்து விட முடியும், அந்தளவு தொழில்நுட்பம் வந்து விட்டது.

ஆனால், இங்கு, மேடையில் நிகழ்வது தான் நிஜமான திறமை.ஒரே ஒரு தடவை சோ நாடகத்தை பார்த்தேன். அதன் ஒவ்வொரு காட்சியும் எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கிறது. எனக்கு நல்ல நாடகங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும். மீண்டும் நாடகங்களில் நடிக்க ஆசை. 'பிரித்வி தியேட்டர்' இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கண்டிப்பாக மேடை ஏற உள்ளேன். அரசியல் மேடை இல்லை.மும்பையில் சசிகபூர், 'பிரித்வி தியேட்டர்' ஒன்றை அமைத்துள்ளார். அதுபோல ஒன்றை இங்கு அமைக்க ஆசைப்படுகிறேன். இவ்வாறு கமல் உரையாற்றியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .