A.K.M. Ramzy / 2021 ஜனவரி 03 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேலம்,
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சட்ட மன்ற தேர்தலையொட்டி சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2 நாள்கள் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
இதற்காக இன்று காலை விமானம் மூலம் சேலம் வரும் கமல்ஹாசன் குரங்குசாவடி பகுதியில் தங்குகிறார். இதையடுத்து மாலை 3.30 மணியளவில் அழகாபுரம் தெய்வீகம் திருமண மண்டபம் அருகில் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் உரையாற்றுகிறார்.
அதன் தொடர்ச்சியாக குப்பனூர் வழியாக இரவு 7 மணிக்கு அயோத்தியாப்பட்டணம் செல்லும் கமல்ஹாசன் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். பின்னர் ரெட்டிபட்டி பகுதியில் இரவு 8 மணிக்கு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சேலம் 4 ரோடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்யும் கமல்ஹாசன், அதன்பிறகு அம்மாபேட்டை காமராஜர் காலனியில் உள்ள கொங்கு கல்யாண மண்டபத்தில் நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026