A.K.M. Ramzy / 2020 நவம்பர் 26 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிவர் புயல் முழுவதுமாக கரையைக கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்திய நேரப்படி இன்று வியாழக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் புயல் முழுவதுமாக கரையைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிவர் அதிதீவிர புயல் வலுவிழந்து தீவிரப் புயலாக நிலப்பகுதியில் இருக்கிறது எனவும் அடுத்த சில மணி நேரங்களில் தீவிரப் புயல் வலுவிழ ந்து புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப் படுகிறது.
புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் நேற்று இரவு 11.30 மணிமுதல் இன்று அதிகாலை நான்கு மணிக்குள் நிவர் புயல் முழுவதுமாக கரையைக் கடந்துவிட்டது என தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று வடதமிழகத்தில் மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
22 minute ago
27 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
32 minute ago