2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கர்நாடகாவில் புகையிலைக்கு தடை

Freelancer   / 2024 நவம்பர் 10 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 அரச ஊழியர்கள் உடல் நலம், பொதுமக்களின் ஆரோக்கியம் ஆகியவற்றின் நலன் கருதி, கர்நாடகவில் உள்ள அரச அலுவலகங்கள், அலுவலக வளாகங்களில் புகைப்பிடித்தல், புகையிலை பொருட்களை உபயோகித்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை, அலுவலகங்களில் போதை தரக்கூடிய எந்தப் பொருளையும் உட்கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளது

இதுதொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு பலகை, அலுவலகங்களில் பொருத்தமான இடங்களில் வைக்கப்பட வேண்டும் எனவும், இதை மீறினால் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கர்நாடக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X