2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கலக்கிய கல்யாண ராணி: 58 வயசில் கலங்கிய கறிக்கடைக்காரர்

Editorial   / 2025 ஜூன் 30 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்வார்கள்.. ஆனால் திருமணம் என்பது பணத்தில் தான் நிச்சயிக்கப்படுவதாக ஏழைகள் சொல்வார்கள். பணக்காரர்கள் அழகில் தான் நிச்சயிக்கப்படுவதாக சொல்வார்கள். வசதி உள்ளவர்களுக்கு அழகு இல்லை என்றும், வசதி இல்லாதவர்களுக்கு பணம் இல்லை என்றும் திருமணம் நடப்பது இல்லை. இதை பயன்படுத்தி சில பெண்கள் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள்.. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த பெண் ஆறு பேரை திருமணம் செய்து, பணம், நகையை வாங்கி ஏமாற்றியதாக சிக்கியுள்ளார்.

சில பெண்கள் பணம், நகைக்கு ஆசைப்பட்டு, திருமணம் செய்கிறார்கள். திருமணம் முடிந்து சில மாதங்கள் வாழும் அவர்கள், அவர்களிடம் நகை பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிவிடுகிறார்கள். வேறு ஒரு ஊரில், அதேபோல் ஒரு வயதானவரை ஏமாற்றி திருமணம் செய்து அவரிடமும் பணம் நகையை வாங்கி ஏமாற்றுகிறார்கள்.. அப்படி ஏமாற்றிய பெண்கள் அண்மைக்காலங்களில் கைதாகி வருகிறார்கள். அந்த வகையில் விருத்தாசலத்தைச் சேர்ந்த 40 வயது பெண் மீது ஆறு பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் 58 வயதாகும் நபர் ஒருவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு வீட்டு வேலை செய்வதற்காக கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த 40 வயதுடைய பெண் வந்தாராம். அப்போது கறிக்கடைக்காரருக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களாம்.

58 வயதாகும் கறிக்கடைக்காரர் தனது மனைவியாக வந்த விருத்தாசலம் பெண்ணுக்கு ரூ.6 லட்சம் ரொக்கம்,, 8 பவுன் தங்க நகை, ½ கிலோ வெள்ளிப்பொருட்கள், வெள்ளி கொலுசு, ஸ்கூட்டர் ஆகியவை கொடுத்தாராம். இவை அத்தனையும் பெற்ற அவர் 3 மாதம் மட்டுமே கறிக்கடைக்காரருடன் குடும்பம் நடத்தினாராம். பின்னர் அவருடன் தகராறு செய்து விட்டு நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு விருத்தாசலத்துக்கு வந்துவிட்டாராம்.

இதனை தொடர்ந்து கடந்த 20-ந் திகதி கறிக்கடைக்காரர், விருத்தாசலத்துக்கு வந்து தான் வாங்கிக்கொடுத்த நகை, பணத்தை திருப்பி தருமாறு அந்த பெண்ணிடம் கேட்டாராம். அதற்கு அந்த பெண், நகை மற்றும் பணத்தை தர முடியாது என மறுத்ததுடன், தனது மகன்களை வைத்து கறிக்கடை உரிமையாளரை திட்டி, தாக்கி, கழுத்தில் கத்தி வைத்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து விருத்தாசலம் ​பொலிஸ் நிலையத்தில் கறிக்கடைக்காரர் புகார் கொடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து கறிக்கடைக்காரர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனக்கு கணவர் கிடையாது என்றும், உங்களோடு வாழ்ந்து விடுகிறேன் என்றும் அந்த பெண் என்னிடம் தெரிவித்தார். அதை நம்பி நான், அந்த பெண்ணை திருமணம் செய்தேன். ஆனால் அவர் என்னிடம் நகை, பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டார். இங்கு வந்து விசாரித்தபோதுதான் என்னை போன்று மேலும் 5 பேரை அந்த பெண் திருமணம் செய்து கொண்டு நகை, பணத்தை சுருட்டியது தெரிந்தது" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .