Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2025 ஜூலை 16 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கணவனின் கள்ளக் காதலியை செல்போன் மூலம் அழைத்து தனியாக பேச வேண்டும் என அவரது மனைவி அழைத்துள்ளார். அந்த கள்ளக் காதலியும் அங்கு வந்துள்ளார் இந்த சம்பவம், கோயம்புத்தூரில் இடம்பெற்றுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி பகுதியில் ஒரு 43 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் மனைவி குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்றது. இந்த நிலையில் தான் அவருக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்தனர்.
இந்த விவகாரம் ஊழியரின் மனைவிக்கு தெரிய வரவே அவர் தன் கணவனிடம் கள்ளக்காதலை விட்டு விடும்படி கெஞ்சியுள்ளார். ஆனால் அவர் கணவன் கேட்கவில்லை. இதனால் தன் கணவனின் கள்ளக் காதலியை செல்போன் மூலம் அழைத்து தனியாக பேச வேண்டும் என அவரது மனைவி அழைத்தார்.
அந்தப் பெண் அழைத்ததால் கள்ளக்காதலி அங்கு சென்ற நிலையில் தன்னுடைய கணவனை விட்டு விடும்படியும் இரண்டு குழந்தைகள் தனக்கு இருப்பதால் தயவுசெய்து கள்ளக்காதலை கைவிடுங்கள் என்றும் மனைவி கெஞ்சியுள்ளார். அப்போது அந்த பெண் கேட்பது போல் அங்கிருந்து சென்ற நிலையில், திடீரென இரண்டு நாட்களுக்கு பிறகு கணவன் காணாமல் போய்விட்டார்.
அவரது கணவர் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் என இருந்த நிலையில் அந்த பெண்ணையும் தொடர்பு கொள்ளவில்லை. இதனால் இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு ஓடியது தெரியவந்த நிலையில் பின்னர் மனைவி பொலிஸில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்போது இருவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago