A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 16 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூரு:
பிரம்மாவர் தாலுகாவில் நண்பனின் மனைவியின் கள்ளக்காதலை கண்டித்த வியாபாரி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் கள்ளக்காதலனை பொலிஸார் கைது செய்தனர்.
ஒசூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் நாயக்(வயது 43)என்பவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் இவரது நண்பனின் மனைவியும் அவரது மகனும் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், வாலிபனொருவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதையடுத்து வாலிபனும், அந்தப் பெண்ணும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதுபற்றி நவீனுக்கு தெரியவந்தது. அவர் அந்த பெண்ணை அழைத்து கண்டித்துள்ளார். அப்போது அந்த பெண், நவீனை திட்டி உள்ளார். மேலும் தனது தனிப்பட்ட விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று எச்சரித்து இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு வாலிபனும், அவரது கள்ளக்காதலியான அந்த பெண்ணும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நவீன், அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபனும், நவீனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதலர் தினத்தன்று நவீனின் மனைவி மற்றும் மகன்கள் வெளியே சென்றிருந்தனர்.
வீட்டில் நவீன் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதுபற்றி அந்த பெண், தனது கள்ளக்காதலனான வாலிபனுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். அதன்பேரில் வாலிபன் தனது கூட்டாளிகள் 5 பேருடன் காரில் நவீனின் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து நவீனை அவர்கள் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago