2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

’கள்ளனுக்கு விதான வேலை’

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 03 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரியாங்குப்பம்;

 இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களிலும்  சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்த வண்ணமுள்ளன. இதில் வயது வித்தியாசமின்றி பல சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்றுவருகின்றன.  

புதுச்சேரியிலுள்ள கிராமமொன்றில்  சிறுமியொருவரை  பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் சிக்கிய இந்திய ரிசர்வ் பட்டாலியன் (ஐ.ஆர்.பி.என்.) பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர்,புதுச்சேரி பொலிஸில் கடமையாற்றி வருகிறார்.இவர், 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 'போக்சோ' பிரிவின்கீழ் தவளக்குப்பம் பொலிஸார்  வழக்கு பதிந்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரை கண்டுகொள்ளாத சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பாலியல் வழக்கில் சிக்கிய பெலிஸ் அதிகாரி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.  தலைமறைவாக இருந்த இவரை நேற்று முன்தினம் நல்லவாட்டில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்தது. தவளக்குப்பம் பொலிஸ்  அவரது வீட்டுக்குச் சென்று,பொலிஸ் அதிகாரியை  கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி   சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .