A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரி:
புதுவையில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதை தொடர்ந்து எதிர்க்கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
புதுவை சட்டசபை வளாகத்தில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரிமணிகண்டன், பாஸ்கர், மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் ஆகியோர் வந்தனர். இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், எம்.எல்.ஏ. செல்வகணபதி, ஏம்பலம் செல்வம் ஆகியோரும் வந்தனர்.
இதன்பின் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் வந்தனர். சிறிது நேரம் அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இராஜினாமா செய்துள்ளனர்.
போதிய எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லாததால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது. தானாக முன்வந்து காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டும். இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த அரசும் பதவி விலக வேண்டும்.
இந்த அரசு பதவி விலகாவிட்டால் எதிர்க்கட்சியினர் விவாதித்து முடிவெடுப்போம். ஒரு நிமிடம் கூட இந்த அரசு நீடிக்க முடியாது என்றார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago